புதன், 26 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 நவம்பர் 2025 (14:45 IST)

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்ததன் மூலம், 25 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த மண்ணில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த படுதோல்விக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளை சந்தித்தார்.
 
தன்மீது பழி துவங்குவதாக கூறிய கம்பீர், இந்தத் தோல்விக்கு அணியில் உள்ள அனைவரும் பொறுப்பு என்றார். "தனிப்பட்ட வீரர்களையோ அல்லது ஷாட்களையோ குறை சொல்ல முடியாது. நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
 
தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு, "இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை. பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும்," என்று பதிலளித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற, அதிக திறமையான வீரர்களை விட, 'வரையறுக்கப்பட்ட திறமையுடன் கூடிய கடினமான நபர்கள்' அணிக்குத் தேவை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க கூட்டு முயற்சி அவசியம் என்றும் கம்பீர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran