புதன், 12 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 நவம்பர் 2025 (18:01 IST)

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராவது குறித்து, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
பிசிசிஐ நேர்காணலில் பேசிய கம்பீர், உலக கோப்பைக்குத் தயாராவதற்கு இந்திய அணிக்கு இன்னும் மூன்று மாதங்கள் போதுமான அவகாசம் இருப்பதாக குறிப்பிட்டார்.
 
"இந்திய அணி நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கிறது," என்று கூறிய கம்பீர்  வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பார்கள் என நம்புவதாகவும், சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டதுபோல், ஒவ்வொரு வீரருக்கும் சவாலான பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
நடப்பு சாம்பியனான இந்திய அணி தீவிர பயிற்சியை தொடரும் நிலையில், கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
 
Edited by Siva