மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கௌகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா, 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நான்காம் நாள் ஆட்டத்தை முடித்தது.
இந்த போட்டியை இழந்தால் இந்திய அணி சொந்தமண்ணில் வொயிட்வாஷ் ஆன மோசமான சாதனையைப் படைக்கும். அதனால் ஐந்தாம் நாளில் எப்படியாவது டிரா செய்யவாவது போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பினர்.
இதனால் இந்திய அணி 140 ரன்கள் மட்டும் சேர்த்து படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்னர் ஆறு விக்கெட்களை வீழ்த்தினார்.