யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா குறித்து விமர்சனம் செய்த முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் ஹர்ஷித் ராணா இடம்பெற்றதற்கு, கம்பீரின் செல்வாக்கே காரணம் என ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கம்பீர், "வெறும் யூடியூப் பார்வைகளுக்காக 23 வயது இளம் வீரரை குறிவைப்பது வெட்கக்கேடானது. உங்களுக்கு பேச வேண்டுமென்றால், என்னை தாக்குங்கள். என்னால் சமாளிக்க முடியும்" என்று ஆவேசமாக கூறினார்.
மேலும், "ஹர்ஷித் ராணா தனது திறமையின் மூலமே அணியில் இடம்பெற்றுள்ளார். இது போன்ற இளம் வீரர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran