புதன், 15 அக்டோபர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:24 IST)

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!
இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவர்களின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அதுவரைக்கும் அவர்களை பிசிசிஐ அணிக்குள் விட்டுவைக்க வாய்ப்பில்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. சமீபத்தில் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் கேப்டன்சியை தேர்வுக்குழு பறித்தது. அதனால் இந்த மாதம் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா தொடர்தான் அவர்களுக்கானக் கடைசி தொடராக இருக்கும் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர்கள் இருவரின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு கம்பீர் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். அதில் “உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் கொஞ்சம் நிகழ்காலத்தில் இருப்பது நல்லது. அவர்கள் இருவருக்கும் ஆஸ்திரேலியா தொடர் சிறப்பான ஒன்றாக அமைய வாழ்த்துவோம்” எனக் கூறியுள்ளார்.