புதன், 15 அக்டோபர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 அக்டோபர் 2025 (10:15 IST)

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய கிரிக்கெட்டின் இளம் சென்சேஷனல் வீரரான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அடுத்தடுத்து அதிரடி இன்னிங்ஸ்கள் மூலமாக கவனம் ஈர்த்து வருகிறார். இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அவர் 30 பந்துகளில் அடித்த சாதனை சதம் ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான தருணமாக இடம் பிடித்தது.

இதையடுத்து அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த போட்டியில் 52 பந்துகளில் சதமடித்த அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் வெகு விரைவாகவே சூர்யவன்ஷி அறிமுகமாகி கலக்குவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இப்படி தொடர்ந்து சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வரும் அவர் அடுத்த ரஞ்சிக் கோப்பைத் தொடரில் பிகார் அணிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூர்யவன்ஷிக்கு தற்போது 15 வயதுதான் ஆகிறது. இதன் மூலம் மிக இளம் வயதிலேயே துணைக் கேப்டன் பொறுப்பைப் பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் வைபவ்.