வியாழன், 14 ஆகஸ்ட் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 26 ஜூன் 2025 (08:58 IST)

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஐந்து பேர் சதமடித்து, இலக்காக 371 ரன்கள் நிர்ணயித்தும் இந்திய அணியால் போட்டியை டிரா கூட செய்ய முடியாமல் போனது. இந்திய அணியின் பவுலிங் மற்றும் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததே இதற்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த இந்திய வீரர்கள் ஐசிசியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜெய்ஸ்வால் நான்காவது இடத்துக்கும் ரிஷப் பண்ட் ஏழாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இது இவர்களின் கேரியரில் சிறந்த தரமாகும். அதே போல கே எல் ராகுல் 20 ஆவது இடத்துக்கும், ஷுப்மன் கில் 38 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.