உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!
இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி, வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 25 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறை.
கௌஹாத்தியில் நடந்த இறுதி போட்டியில், இந்தியா இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 201 மற்றும் 140 ரன்கள் மட்டுமே எடுத்துச் சுருண்டது. தென்னாப்பிரிக்கா 749 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ரன்கள் அடிப்படையில் தனது மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி, 75.00 PCT உடன் WTC புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், ஒன்பது போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்த இந்தியா, 48.15 PCT உடன் புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்குப் பின்னால் 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.
Edited by Mahendran