வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை நவம்பர் 4-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பணியில் அரசுப் பள்ளி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்துவதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களை பயன்படுத்தி, 'தங்கள் வீட்டில் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டோம்' என்று பெற்றோர்களிடம் இருந்து உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற்று வர பள்ளிக் கல்வித்துறை வற்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணிதெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படி, இதுவரை 40% படிவங்கள் மட்டுமே திரும்பி பெறப்பட்டுள்ளன. 60% பணிகள் பாக்கியுள்ள நிலையில், இப்படி கையொப்பம் வாங்குவது, படிவங்களை கொடுக்காமலேயே கொடுத்ததாக காட்டவே என்று ஆசிரியர் ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகணேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதன் மூலம், விடுபட்ட வாக்குகளை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Edited by Mahendran