பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் தீவிர விசுவாசியுமான மறைந்த அகமது படேலின் மகன் பைசல் படேல், பிகார் சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தான் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பைசல் படேல், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை திறமையற்றவர்கள் என்றும், எதிர்க்கட்சி அரசியலுக்கு துரோகம் இழைப்பதாகவும் கூறியுள்ளார். அவர்களை விட 25 மடங்கு அதிக தகுதியுடைய சசி தரூர் போன்ற தலைவர்களிடம் கட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிகார் தேர்தலில் காங்கிரஸ் வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோருடன் தான் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள பைசல், பா.ஜ.க.வில் சேர வாய்ப்புள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே பா.ஜ.க. தலைவர்களை புகழ்ந்து பேசியதுடன், ராகுல் காந்தியின் முடிவுகளுக்கு பின்னால் தவறான ஆலோசகர்களின் ஆதிக்கம் அதிகம் என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva