வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2025 (17:27 IST)

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட பயணிகள் சென்ற இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறங்காமல், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.
 
சென்னையிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்கு கோவைக்குப் புறப்பட்ட இந்த விமானத்தில் செங்கோட்டையன், கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். விமானம் பிற்பகல் 1.40 மணிக்கு கோவை வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
 
ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டு, பயணிகள் அங்கேயே விமானத்தில் அமர வைக்கப்பட்டனர். வானிலை சரியானவுடன் விமானம் கோவைக்கு புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், செங்கோட்டையனை வரவேற்க வந்த தொண்டர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
 
 
Edited by Mahendran