வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2025 (14:24 IST)

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அ.தி.மு.க.வின் தலைமைக்குள் நிலவும் குழப்பம் நிர்வாகிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தடுமாறுவதும், மூத்த தலைவர்களை இழந்ததும் முக்கிய பிரச்னையாக உள்ளது.
 
ஆளும் தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வால் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளுடனான கூட்டணியைக்கூட உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில், பிரிந்தவர்களை இணைக்க குரல் கொடுத்த கொங்கு மண்டலத்தின் செல்வாக்கு பெற்ற மூத்த தலைவர் செங்கோட்டையனை, பழனிசாமி அதிரடியாக நீக்கினார். 
 
ஜெயலலிதா போல அனைவரையும் அரவணைத்து செல்லாமல், அதிருப்தியாளர்களை வெளியேற்றும் பழனிசாமியின் அணுகுமுறையால், முக்கிய நிர்வாகிகள் பலர் அரசியல் வாழ்வு குறித்த அச்சத்தில் உள்ளனர். 
 
கட்சியின் சிதைவைத் தடுக்க, பழனிசாமி உடனடியாக ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதன் மூலம் மட்டுமே நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்ட முடியும். இல்லையேல், பலர் செங்கோட்டையனை போல கட்சி மாற தயாராகி வருவதாக தெரிகிறது.
 
 
Edited by Mahendran