இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!
புதுடெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ராகுல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "மோடி அவர்களே, இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எவ்வாறு மௌனமாக இருக்க முடியும்? உங்கள் அரசு ஏன் எந்த அவசரத்தையும் காட்டவில்லை, ஏன் எந்த திட்டமிடலும் இல்லை? ஏன் இதற்கு பொறுப்பேற்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நாட்டில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், "நான் சந்திக்கும் தாய்மார்கள் பலரும், எங்கள் குழந்தைகள் மாசடைந்த காற்றைத்தான் சுவாசிக்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள். அவர்கள் அதிருப்தி, அச்சம் மற்றும் கோபத்தில் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
புதுடெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடியாக கண்டிப்பான, பயனுள்ள திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றும், ஆனால் மோடி அரசு எந்த அவசரத்தையும் காட்டவில்லை, பொறுப்பேற்கவும் இல்லை என்றும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Edited by Mahendran