மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையடிக்க 3 பைக்!.. பக்கா ஸ்கெட்ச் போட்ட நிஷாந்த்...
சமீபத்தில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 11.3 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக யுடியூபர் மீனாட்சி, நகையை கொள்ளையடித்த நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நிஷாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் அவரை வேனில் அழைத்து சென்றாபோது செய்தியாளர்களிடம் இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நிஷாந்த் கூறியிருந்தார்..
இந்நிலையில்தான் மதுரை தனிஷ் நகைக்கடை கொள்ளைக்கு நிஷாந்த் மூணு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. நவம்பர் 5ஆம் தேதி கொள்ளையடிக்க முயறி செய்தபோது மீனாட்சியின் தாயார் வாகனத்தை பயன்படுத்தியிருக்கிறார். அதன்பின் சில நாட்கள் கழித்து கொள்ளையடிக்கும் போது சர்வேயர் காலனியில் வாடகைக்கு எடுத்த பைக்கை பயன்படுத்தியுள்ளார். கொள்ளைக்கு பின் தனது Heo X Pulse பைக்கில் சேலம் வரை அவர் சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

