1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Instagram Rolls Out 15-Minute Story Editing Feature Without Losing Engagement

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை இனி எடிட் செய்யலாம்... வியூஸ், லைக்ஸ் மற்றும் ரிப்ளைகளில் பாதிப்பு இருக்காது...

instagram
இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது ஸ்டோரிகளை பதிவிட்ட பிறகு 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
இதற்கு முன்பு எழுத்துப்பிழை அல்லது மாற்றங்கள் இருந்தால் ஸ்டோரியை நீக்கிவிட்டு மீண்டும் பதிவிட வேண்டியிருந்தது; இதனால் கிடைத்த வியூஸ், லைக்ஸ் மற்றும் ரிப்ளைகள் அனைத்தும் போய்விடும். இப்போது அந்த பிரச்சனை இல்லாமல் மாற்றங்களைச் செய்யலாம்.
 
ஸ்டோரியை திறந்து, கீழ் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி, 'Edit Story' என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் டெக்ஸ்ட், மியூசிக், ஸ்டிக்கர்கள் மற்றும் டூடுல்களை எளிதாக மாற்றி கொள்ளலாம். ஸ்டோரி திருத்தப்பட்டிருந்தால், பார்ப்பவர்களுக்கு 'Edited' என்ற லேபிள் தெரியும்; ஆனால் ஏற்கனவே வந்த லைக்ஸ், வியூஸ் அப்படியே இருக்கும்.
 
மேலும், ஸ்டோரி பக்கத்தில் புதிய பேக்ரவுண்டுகள், புது ஃபான்ட்கள், கலர்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள் மற்றும் பல புகைப்படங்களை எளிதாக தேர்ந்தெடுத்து பகிரும் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர, வீடியோக்கள் அனுமதியின்றி பதிவேற்றப்பட்டால் கண்டறியும் கருவி மற்றும் டீனேஜ் பயனர்களின் பாதுகாப்பிற்கான வயது சரிபார்ப்பு ஏஐ வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை வரலாறு காணாத சரிவு.. 10 நாளில் 12000 ரூபாய் குறைவு..