1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. story behind how nishanth got into police

கிளீனர் போனை வாங்கி பேசிய நிஷாந்த்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?..

tanishq
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11.3 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே யுடியூபர் மீனாட்சி மற்றும் கொள்ளையன் நிஷாந்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் வைத்து நிஷாந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்..

நிஷாந்த் தலைமுறைவானதால் அவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கோவை, சென்னை, பெங்களூர், மும்பை என பல இடங்களுக்கும் நிஷாந்த் சென்றதால் அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு அவர் ஆம்னி பேருந்தில் வந்தபோது காவல்துறைக்கு ஓட்டுனர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்..

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து ஓட்டுநர் ‘கிளீனர் போனை வாங்கி நிஷாந்த் யாரிடமோ சினான். அப்போது ‘ நான் நிஷாந்த் பேசுகிறேன்’ என கூறியதால் சந்தேகம் வந்தது.. போன் பேசும்போது மாஸ்க்கை கழட்டிவிட்டு பேசினான்.. இதை கிளீனர் ஓடி வந்து என்னிடம் கூறினார்.. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.

நிஷாந்துக்கு சந்தேகம் வந்துவிட்டது. ரெஸ்ட் ரூம் போக வேண்டுமென நிஷாந்த் கூறினான். பேருந்தை நிறுத்த முடியாது என கூறினோம்.. போலீசார் சொன்னபடி பஸ் கதவை மூடிவிட்டு டீ கடைக்கு சென்றோம்.. கதவை திறக்காததால் நிஷாந்த் கத்தினான். டிரைவர் சீட் ஜன்னலில் இருந்து நிஷாந்த் வெளியே குதித்தான்.. அப்போது போலீஸ் வந்து பிடித்து விட்டனர்.. சரியான நேரத்தில் போலீஸ் நிஷாந்தை கைது செய்துவிட்டனர்’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் உத்தரவு...