1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. high court extended anbil magesh prision

அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் உத்தரவு...

anbil magesh
கடந்த திமுக ஆட்சியில் அன்பில் மகேஷ் கல்வி அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது, புதுப்பிப்பது போன்ற காரணங்களுக்காக கட்சி நிதி என்கிற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அன்பில் மகேஷின் முன் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் சில முறை அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சினிமா வேற.. அரசியல் வேற.. மக்கள் ஏமாந்து போறாங்க.. விஜயை அட்டாக் செய்த நெப்போலியன்..