1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. robbery attempt happened one week before

மதுரை நகை கடை கொள்ளையில் புதிய டிவிட்ஸ்ட்!.. போலீசார் விசாரணை....

madurai tanishq
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடைக்குள் புகுந்த கொள்ளையர் 35 கிலோ எடை நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும்,  அதன் மதிப்பு 50 கோடி எனவும் சொல்லப்பட்டது.

அதன்பின் 40 கோடி மதிப்பிலான நகைகள் என செய்திகள் வெளியானது. தற்போது 20 கோடி மதிப்பிலான நகை என்கிறார்கள். கொள்ளைக்காரனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு அதே கடையில் அதே நபர் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தற்போது தெரியவந்தது.

ஒரு வாரம் முன்பு நடைபெற்ற அந்த திருட்டு முயற்சி கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தும் கூட நிர்வாகம் தரப்பில் உடனடியாக புகார் அளிக்கவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே ஆண்டில் மூன்று விதமான வாக்காளர் எண்ணிக்கைகள்.. என்ன நடக்கிறது எஸ்.ஐ.ஆர் பணியில்?