மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் 35 கிலோ நகை கொள்ளை!.. கடை திறந்து 15 நாட்களில் அதிர்ச்சி...
இந்தியாவில் பல மாநிலங்களிலும் அவ்வப்போது நகைக்கடைகளின் ஷட்டரை உடைத்தோ, ஓட்டையிட்டோ கொள்ளையர்கள் உள்ளே புகுந்து கிலோக்கணக்கான நகைகளை கொள்ளையடித்து செல்வது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் பெரும்பாலும் போலீசாரிடம் சிக்கி விடுவார்கள்..
இந்நிலையில்தான், மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 500 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கடை 15 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.
தனிஷ்க் நகைக்கடையில் நேற்று முகமூடி அணிந்த மர்ம நபர் அதிகாலை 3 மணியளவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. கொள்ளை நடந்த நகைக்கடையில் தடய அறிவியல் குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
35 கிலோ தங்க நகைகள் என்பதால் அதன் மதிப்பு தோராயமாக ரூ.50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.