1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. myskin said joseph vijay will be best cm

விஜய் பெஸ்ட் முதலமைச்சரா இருப்பார்!.. இயக்குனர் மிஷ்கின் பெருமிதம்....

myskin
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடிகராக இருந்தவர் விஜய். இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. பல வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற முடிவில் அதற்கான வேலைகளில் இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார்.

அதோடு ஜனநாயகன் படத்திற்கு பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் விஜயையும், ஆட்சியையும் எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஒருபக்கம் திரையுலகில் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

விஜயை எனக்கு பர்சனலாக தெரியும். அவர் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். நாங்கள் கூட தாமதமாக வருவோம்.. ஆனால், விஜய் காலை 8 மணிக்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். வேலையில் டெடிகேஷனோடு இருப்பார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வேகமாக கற்றுக் கொள்வார். ஆள்தோட்ட பூபதி பாடலில் 35 வினாடிகள் ஒரே ஷாட்டில் நடனம் ஆட வேண்டும்.. அப்போது, விஜய்க்கு கடுமையான முதுகு வலி.. ஆனாலும் மாஸ்டரை ஆட சொல்லி ஒரே முறைதான் பார்த்தார்.

அவ்வளவுதான்.. ஷாட்டில் அது போலவே ஆடிவிட்டார். இப்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். எனவே எல்லாவற்றையும் சரியாக கற்றுக்கொண்டு ஒரு சிறந்த முதலமைச்சராக அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை இனி எடிட் செய்யலாம்... வியூஸ், லைக்ஸ் மற்றும் ரிப்ளைகளில் பாதிப்பு இருக்காது...