1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. rip prank ended with murder in punjab

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

prank
பொதுவாக பிராங்க் என்பது எல்லோராலும் ரசிக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. Prank செய்யப்படும் நபர் கூட உண்மை தெரிந்த பின் அவரே தன்னை தானே நினைத்து சிரித்துக் கொள்வதும் உண்டு. அப்படிப்பட்ட பல பிராங்க் வீடியோக்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். ஒருபக்கம் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பிராங்க் செய்து கொள்வதுண்டு. சில சமயம் அது விபரீதத்திலும் முடிவதுண்டு.

அப்படித்தான் நண்பர்கள் செய்த பிராங்கால் பஞ்சாப்பில் ஒரு இளைஞரின் உயிர் பறிபோய்விட்டது. ஹானி பன்சால் என்பவரின் புகைப்படத்தை அவரை நண்பர்கள் whatsapp குரூப்பில் RIP என பகிர்ந்து Prank செய்துள்ளனர். இதனால் பலரும் ஹானி இறந்து விட்டதாக நம்பிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஹானி நண்பர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறிவிட்டது. அப்போது ஆத்திரமடைந்த அந்த நான்கு நண்பர்களும் ஆயுதங்களால் ஹானியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். வாட்ஸ்அப்பில் Prank-ஆக தொடங்கிய சம்பவம் சில மணி நேரங்களிலேயே கொலையில் முடிந்திருக்கிறது. இதையடுத்து ஹானியை அடித்துக் கொலை செய்த நான்கு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...