எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...
கடந்த பல வருடங்களாகவே பாஜக எதிர்ப்பு என்கிற நேர்க்கோட்டில்தான் திமுக பயணித்து வந்தது. பாஜக உள்ளே வந்துவிடும் என்று சொல்லித்தான் தமிழகத்தில் திமுக அரசியல் செய்து மக்களிடம் வாக்குகளையும் பெற்று ஆட்சியும் அமைத்தது.
ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சி ஆட்சி அமைக்க 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் பல வருடங்கள் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. அதில் கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் தவெக அமைச்சரவிலும் இடம் பெற்றுள்ளன.
எனவே, திமுகவின் பழைய கூட்டணி அடுத்த தேர்தலில் தொடர வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது. மேலும் விஜயை எதிர்ப்பதற்காக திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
ஒருபக்கம் தொடக்கம் முதலே எதிர்த்து வந்த பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக இன்று திமுக திடீரென அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. கூட்டணி கட்சிகள் வெளியேறியதால்தான் திமுக இந்த முடிவை எடுத்திருப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை இன்று திமுக தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்ததால் என்னை பொருத்தவரை இந்தியாவில் கூட்டணி வரைபடம் மாறியிருக்கிறது. நீங்கள் அடுத்த ஆறு மாதங்களில் பார்ப்பீர்கள். நடக்க கூடாத கூட்டணிகள் எல்லாம் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நடக்கப் போகின்றன என பொடிவைத்து பேசியிருக்கிறார்.