1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. lamp flame in thiruparankundram temple

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

temple
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல வருடங்களாகவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மலையில் உள்ள ஒரு கல் தூணை தீபத்தூண் எனக் கூறி இந்து அமைப்பினர் அந்த இடத்திலும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என பல நாட்களாக கூறி வந்தனர்.

கடந்த வருடம் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அந்த கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வெளியானது. ஆனால் அப்போதைய திமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. தற்போது, தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக இந்த அமைப்பினர் வழக்கு வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியது. ஆனால், தவெக அரசு அதை செய்யவில்லை. இதனால், கோபமடைந்த உச்சநீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி இன்று அந்த கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அந்த இடத்தில் தீபம் ஏற்றும் ஏற்பாடுகள் நடந்தது. அதில், 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் அந்த குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இந்து அமைப்பினரும், பக்தர்களும் அந்த இடத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கோவிலில் அடிவாரத்தில் இருந்து அவர்கள் தீபத்தை கண்டு ‘முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தொகுதி மறுவரை!.. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு எம்.பி-க்கள்?..