1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 மே 2025 (08:14 IST)

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

Kashmir

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் தீவிரமாக நடந்து வந்த நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி வந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட நிலையில், பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய பகுதிகள் மீது ட்ரோன்களை கொண்டு தாக்குதலை நடத்தி வந்தது. அதை இந்திய ராணுவம் வானிலேயே அழித்தது. எனினும் பஞ்சாப், காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டும் ஒரு சில தாக்குதல்கள் நடைபெற்றன.

 

இருநாடுகளிடையேயான இந்த போருக்கு நடுவே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று 9 மணியளவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியை தாக்கியது. அதை இந்திய ராணுவம் முறியடித்ததுடன், போர் நிறுத்தத்தை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தது.

 

அதற்கு பிறகு தற்போது காலை வரை பாகிஸ்தான் எந்தவிதமான தாக்குதலிலும் ஈடுபடவில்லை என தெரிகிறது. இதனால் காஷ்மிரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஞ்சாபில் மின்சார இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டிருந்தாலும், ரெட் அலெர்ட் தொடர்வதால் மக்கள் அறிவிப்பு வரும் வரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K