1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 மே 2025 (15:23 IST)

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

மே 7ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் 5 முக்கியமான பயங்கரவாத தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இப்போது, அவர்களின் விவரங்கள் வெளிவந்துள்ளன.
 
1. ஹபீஸ் முகமது ஜமீல் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த இவர், அதன் தலைவர் மவுலானா மசூத் அசாரின் மைத்துனர். இளைஞர்களை திசைதிருப்பி தீவிரவாதம் நோக்கி செல்ல தூண்டியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
 
2. முகமது யூசுப் அசார் – மசூத் அசாரின் மற்றொரு மைத்துனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்திய விமானம் IC-814ஐ கடத்திய வழக்கில் தேடப்பட்டவர்.
 
3. முகமது ஹசன் கான் – ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த இவர், காஷ்மீரில் தாக்குதல்களுக்கு சதி திட்டங்களை வகுத்தவர். இவர், அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி முப்தி அஸ்கர் கானின் மகன்.
 
4. காலித் – லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜம்மு காஷ்மீரில் தாக்குதல்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார். இவரது இறுதிச்சடங்கில் பாக் ராணுவ அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.
 
5. அபூ ஜுண்டால் – லஷ்கர் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்த இவர், முரிட்கே பகுதியில் மார்க்கஸை நடத்தியவர். இவருக்கும் பாக் ராணுவ ஆதரவு இருந்தது.
 
Edited by Mahendran