1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 மே 2025 (11:40 IST)

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இன்று மாலை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக "ஒற்றுமை பேரணி" நடைபெற உள்ளது. இதை ஒட்டி மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
 
பேரணி இன்று மாலை 5 மணிக்கு டிஜிபி அலுவலகம் அருகிலிருந்து தொடங்கி, நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது. இதற்காக மாலை 4 மணி முதல் 6 மணி வரை மெரினா பகுதியிலுள்ள சில சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து மாற்ற விவரங்கள்:
 
திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை. மாற்று வழிகள்: சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலை.
 
பாரிமுனையிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கு தடை. மாற்று வழிகள்: அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் சாலை.
 
அண்ணா சிலையிலிருந்து மையமாக நகரும் பஸ்கள் மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக மத்திய கைலாஷை அடையும்.
 
கிரீன்வேஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், மந்தைவெளி, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக பயணம் செய்யலாம்.
 
மேலும், வணிக வாகனங்களுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை சில முக்கிய சாலைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு பயண திட்டங்களை அமைத்துக் கொள்வது நல்லது.
 
Edited by Mahendran