1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 மே 2025 (15:34 IST)

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

Chidambaram
இந்தியா பாகிஸ்தான் போர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
உயிரிழப்புகள் மேலும் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கை என்று அவர் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.
 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் நடுநிலை களத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
 
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் மாலை 6 மணிக்கு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதில் ஒழுங்குகள் இருந்ததை ஆச்சரியமாக பார்க்கிறேன்.   மொத்தத்தில் இந்த மோதல் போர் வரை செல்லாமல் மக்களை காப்பாற்றியுள்ளது என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva