1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 மே 2025 (10:15 IST)

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

BSF Constable wife

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை மீட்டுத் தரும்படி அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு மூண்டது. அப்போது பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் விவசாயக் குழு ஒன்றை அழைத்துச் சென்ற இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் சாஹூ எல்லைக் கடந்து பாகிஸ்தானுக்குள் வந்ததாக கூறி அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துக் கொண்டுச் சென்றனர்.

 

பூர்ணம் சாஹூவிற்கு திருமணமாகி ரஜனி என்ற மனைவி உள்ளார். ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர் தனது கணவரை மீட்டுத்தரக் கோரிக்கை வைத்த நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய ரஜனி “என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ராணுவ அதிகாரிகள் என் கணவரை மீட்டு அழைத்து வர முயற்சிப்பதாக சொன்னார்கள். ஆனால் இப்போது அடுத்து என்ன செய்தி வருமென்றே தெரியவில்லை. எனது சிந்தூரை எனக்குத் திரும்பக் கொடுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Edit by Prasanth.K