1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 மே 2025 (12:02 IST)

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மும்பையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி வந்தது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட நிலையில், பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய பகுதிகள் மீது ட்ரோன்களை கொண்டு தாக்குதலை நடத்தி வந்தது. அதை இந்திய ராணுவம் வானிலேயே அழித்தது. எனினும் பஞ்சாப், காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டும் ஒரு சில தாக்குதல்கள் நடைபெற்றன.

 

இருநாடுகளிடையேயான இந்த போருக்கு நடுவே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று 9 மணியளவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் மும்பையின் அனைத்து பகுதிகளிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போர் சூழல் நிலவி வரும் நிலையில் பட்டாசுகளின் சத்தம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 11 முதல் ஜூன் 9 வரை பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K