இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த பாகிஸ்தான் தாக்குதல் மற்றும் போரின் தற்போதைய நிலை குறித்து கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “ எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ள 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறி வைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளையும் பாகிஸ்தான் குறி வைத்தது. ஆனால் பாகிஸ்தானின் அனைத்து முயற்சியும் இந்திய ராணுவத்தால் தவிடுப்பொடியாக்கப்பட்டது.
பாகிஸ்தான் போர் விமானங்கள் நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்கியது. ஆனால் துல்லியமாக தாக்கி வீழ்த்தும் ஏவுகணைகளை பயன்படுத்தி அந்த தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. ஆதன்பூர், பதான்கோட் ராணுவ தளங்களில் இதனால் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. ப்ரமோஸ் ஏவுகணை தளத்திற்கு எந்த சேதமும் இல்லை.
இந்தியாவின் S-400 ஏவுகணை அமைப்பை அழித்ததாகவும், சூரத் மற்றும் சிர்சாவில் உள்ள விமான நிலையங்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்ப முயற்சித்துள்ளது. பாகிஸ்தானால் பரப்பப்படும் இந்த தவறான செய்திகளை, இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறது” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Edit by Prasanth.K