1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 மே 2025 (21:19 IST)

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

Omar abdullah

ஜம்முவின் பல இடங்களில் குண்டு வெடிப்பது போன்ற சத்தங்கள் கேட்பதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வலுவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்த தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் அந்த முயற்சிகளை இந்திய ராணுவம் தங்களது பலத்தால் எதிர்கொண்டு தடுத்து வருகிறது.

 

இந்நிலையில் தற்போது பாகிஸ்தானில் சில குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, “நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள், அநேகமாக கனரக பீரங்கிச் சத்தங்கள், இப்போது கேட்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து காஷ்மீரின் சில பகுதிகளில் சைரன் சத்தங்கள் கேட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து நாளை இந்திய ராணுவம் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K