1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 மே 2025 (11:04 IST)

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

Arrest
பகல்ஹாம்  தாக்குதலை மத்தியில் ஆளும் பாஜகவில் திட்டம் தான் என கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 
 
பீகார் சட்டசபை தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக பகல்ஹாம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தீவிரவாதிகள் எப்படி தப்பிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
இது குறித்து பாஜக இளைஞர் அணியினர் காவல் துறையில் புகார் அளித்த நிலையில், இந்த வீடியோவை பதிவு செய்த முனீர் கான் குரேஷி என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்க பதிவு செய்யப்பட்டது. மேலும் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேபோல், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், "நான் ஒரு இந்தியன், தாய் நாட்டை நேசிக்கிறேன், தனது கருத்து முட்டாள்தனமானது என்பதை புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran