1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 மே 2025 (11:37 IST)

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

Pawan Kalayan
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும் என ஆந்திர துணை முதலமைச்சர் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தெரிவித்தார்.
 
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பேரனும், சமூக சுயநிலைக் குழுக்களின் உறுப்பினருமான சத்திய ராஜேந்திரன் பவன் கல்யாணை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலை, நிர்வாக சிக்கல்கள், கலாசார பாதுகாப்பு, மத ஒற்றுமை, மற்றும் பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
அதன்பின் பவன் கல்யாண் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
"தமிழ்நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் எனக்கு தெரியும். அவற்றை தீர்க்க ஜனசேனாவும் பங்களிக்க தயாராக இருக்கிறது. மக்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் தர வலிமையான தலைமையே தேவை. ' 
 
"சமூக ஒற்றுமை இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் ஒரே நேரத்தில் ஒழுங்கும், ஒற்றுமையும் முக்கியம் என்ற தத்துவத்தை கடைபிடித்தனர். இப்போது அதே நிலை தொடர்ந்து அமைய வேண்டும். தேர்தல்களில் வாக்குகள் சிதறாமல் ஒரு தெளிவான முடிவு வர வேண்டும். எதிர்கால அரசியலில் வலுவான கூட்டணி தேவை."
 
இந்த சந்திப்பு தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் சூழலைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran