1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 மே 2025 (11:04 IST)

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிப்பு.. பட்டுக்கோட்டை அருகே பயங்கர சம்பவம்..!

Murder
பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 பாஜகவின் பெண் நிர்வாகி சரண்யா நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
 
மதுரையைச் சேர்ந்த சரண்யா, தனது முதல் கணவர் சண்முகசுந்தரம் இறந்த பின்னர், இரண்டாவது திருமணமாக  பாலன் என்பவரை திருமணம் செய்து, குடும்பத்துடன் உதயசூரியபுரத்தில் வசித்து வந்தார். தம்பதிகள் அங்கு ஒரு பயண நிறுவனம் மற்றும் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று இரவு, பாலன் மற்றும் அவரது மகன்கள் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்யா நடந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த வழியிலேயே, ஒரு சந்துப் பகுதியில் திடீரென வன்முறை தாக்குதலுக்கு ஆளாகி, கழுத்து மற்றும் பின்பக்கத்தில் வெட்டப்பட்டு சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
 
வாட்டாத்திகோட்டை காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
Edited by Siva