1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 மே 2025 (14:54 IST)

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதட்டம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. அதேபோல் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் அனைத்தையும் முறியடித்தது.
 
இந்த நிலையில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே நுழைந்து அங்கு இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கிய இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
 
மேலும், இந்த போரை மிக திறமையாக,  வீரியத்தோடு நடத்திக் கொண்டிருக்கும் நம் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு, பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், முப்படை அதிகாரிகளுக்கு, முப்படை வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.
 
முன்னதாக, ரஜினிகாந்த், பகல்ஹாம் தாக்குதலின் போதும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்த போது இந்திய ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva