கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா? விஜய் சுனாமியை தாண்டி ஜெயிக்க முடியுமா?
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கொளத்தூரும் இணைந்து காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சட்டமன்த் தேர்தலில், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பல உள்கட்டமைப்பு பணிகளை செய்திருந்தும் கோட்டை கைநழுவியது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அதேசமயம், சமீபத்தில் நடந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியான தவெகவே வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது.
இதனிடையே, சட்டப்பேரவை நிகழ்வுகளை விமர்சித்து பேசிய மு.க. ஸ்டாலின், "நல்லவேளை கொளத்தூர் மக்களுக்கு நன்றி, நான் தப்பித்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில், கொளத்தூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் மு.க. ஸ்டாலின் மீண்டும் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான தவெகவின் செல்வாக்கு வலுவாக இருப்பதால், வெற்றி வாய்ப்பு குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசித்த பிறகே ஸ்டாலின் முடிவெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

