13 மாதக் குழந்தையை கொடூரமாக கொலை செய்தவருக்கு மரண தண்டனை: விஷ ஊசி போட்டு கொள்ள உத்தரவு
அமெரிக்காவில் கடந்த 2008 ஆம் ஆண்டு, பிளைய்ன் எலம் என்பவர் தன்னுடைய காதலியின் 13 மாதங்கள் குழந்தையை கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடந்த நிலையில், தற்போது அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு நேற்று இரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக காதலியின் குழந்தையை சுத்தியலால் அடித்தும், பற்களால் கடித்தும் எலம் சித்திரவதை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva