லடாக்கில் கைது செய்யப்பட்ட சோனம் வாங்க்சு பாகிஸ்தானுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி, பின்னர் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக லடாக் காவல்துறை சந்தேகிக்கிறது.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையிலான போராட்டங்கள் லடாக்கில் நடைபெற்றன. இந்த போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் 90 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, வன்முறைக்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்டு, சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லடாக் காவல் கண்காணிப்பாளர் சிங் ஜம்வால், "சோனம் வாங்சுக் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் அவர் வங்கதேசத்திற்கும் சென்று வந்ததாக தெரியவருகிறது. இதனால், அவரது நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது," என்று தெரிவித்தார்.
Edited by Mahendran