ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 27 செப்டம்பர் 2025 (15:28 IST)

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை மட்டும் சீக்கிரம் வீழ்த்துங்கள்… பாக் வீரர்களுக்கு அக்தர் அறிவுரை!

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை மட்டும் சீக்கிரம் வீழ்த்துங்கள்… பாக் வீரர்களுக்கு அக்தர் அறிவுரை!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன் மூலம் முதல் முறையாக இரு அணிகளும் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த தொடரில் இதுவரை தோல்வியே இல்லாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்தியா. பாகிஸ்தான் அணியை முதல் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் எளிதாக வென்றது. ஆனால் பாகிஸ்தான் அணியோ கலவையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. இதனால் மனதளவிலேயே பாகிஸ்தான் பலவீனமாக உணரும். ஆனால் அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அறிவுரை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில் “இந்திய அணியின் மீதுள்ள ஒளிவட்டத்தை மறந்து விளையாடுங்கள். அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் இந்திய அணியின் பேட்டிங் தடுமாறும். நீங்கள் 20 ஓவர்களும் வீசவேண்டாம். விக்கெட்களை வீழ்த்துங்கள். அபிஷேக் ஷர்மா எல்லா பந்துகளையும் சரியாக் அடிப்பாரா என்ன? அவருக்கும் மிஸ் ஆகும். நிச்சயம் தவறு செய்வார்.” என தெரிவித்துள்ளார்.