ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 27 செப்டம்பர் 2025 (15:22 IST)

தோனியின் சாதனை முந்திய சஞ்சு சாம்சன்!

தோனியின் சாதனை முந்திய சஞ்சு சாம்சன்!
10 ஆண்டுகளாகப் போராடி சஞ்சு சாம்சன் இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். ஆனால் ஷுப்மன் கில் உள்ளே வந்ததால் அவர் தற்போது பின்வரிசையில் ஆடிவருகிறார். நடந்து வரும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையைக் கொத்துக் கறி போட்டு வருகின்றனர் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பயிற்சியாளர் கம்பீரும்.

ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தில், ஒரு போட்டியில் ஆறாம் இடத்தில் என எந்த லாஜிக்கும் இல்லாமல் அவர் விளையாட வைக்கப்படுகிறார். ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவர் தோனியின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனை தோனியின் வசம் உள்ளது. அவர் 98 போட்டிகளில் 52 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். ஆனால் சஞ்சு சாம்சன் 48 போட்டிகளில் 55 சிக்சர்கள் அடித்ததன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.