வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2025 (15:01 IST)

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசதம்பாவித சம்பவத்துக்குக் காரணம் மைதானம் அமைந்துள்ள நெரிசலான இடமே  என சொல்லப்பட்டது.

இதனால் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் வேறொரு புதிய மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் விரைவில் நடக்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம் மைதானத்துக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர் சி பி அணிக்கான ஹோம் மைதானமாக சின்னசாமி மைதானம் செயல்படாது என சொல்லப்படுகிறது. அதற்குப் பதிலாக புனேவில் உள்ள MCA மைதானத்தில் ஆர் சி பி அணிகளின் போட்டிகள் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆர் சி பி அணிக்காகப் போட்டிகளை நடத்த தங்கள் மைதானத்தைத் தர MCA நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.