வெள்ளி, 28 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 மே 2025 (09:16 IST)

ப்ரமோஸ் ஏவுகணையை வெச்சு பொளந்துட்டாங்க! அடிவாங்கியதை ஒருவழியாக ஒத்துக் கொண்ட பாக். பிரதமர்!

Shabaz Sharif

இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் ’மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற ரேஞ்சிலேயே பேசி வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறுதியாக இந்தியாவால் தாக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகளை தாக்கியது. பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளையும் இந்திய ராணுவம் தோற்கடித்தது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், போரில் தாங்கள்தான் வெற்றி பெற்றதாகவும், இந்தியாவின் ரபேல் உள்ளிட்ட விமானங்களை தாக்கி அழித்ததாகவும் தொடர்ந்து பேசி வந்தார்.

 

இந்நிலையில் தற்போது அஜர்பைஜான் சென்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் அங்கு இந்தியாவுடனான போர் குறித்து பேசியபோது “நாங்கள் கடந்த 10ம் தேதி காலை தொழுகைக்கு பிறகு இந்தியாவை தாக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு முன்பே இந்தியா தாக்குதலை நடத்திவிட்டது. சூப்பர் சோனிக் ப்ரமோஸ் க்ரூஸ் ஏவுகணைகளை வைத்து அவர்கள் தாக்கியதில் ராவல்பிண்டி விமான தளம் உட்பட பாகிஸ்தானின் பல பகுதிகள் தாக்கப்பட்டன. இதை எனக்கு ராணுவ தளபதி அசீம் முனிர் தெரிவித்தார்” என பேசியுள்ளார்.

 

தொடர்ந்து இந்தியாவை தாக்கிவிட்டதாகவும், போரில் வென்று விட்டதாகவும் மார்த்தட்டி வந்த ஷெபாஸ் ஷெரீப் தன்னை அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

 

Edit by Prasanth.K