இந்தியாவுக்கு புடின் வரும் தேதி அறிவிப்பு.. பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் டிசம்பர் 4 முதல் 5 வரை இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது வரி விதித்த பின்னரும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பலமடைந்து வரும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த பயணத்தின்போது புடின், பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களும் கூட்டாண்மையை' வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை அமைப்பார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள்.
இந்தச் சந்திப்பு, இந்தியா-ரஷ்யா உறவுகளின் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran