செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 நவம்பர் 2025 (10:13 IST)

பிரபாஸின் பவுசி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகிறதா?

பிரபாஸின் பவுசி திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாகிறதா?
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்துள்ளார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படம் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதற்கிடையில் பிரபாஸ் ‘ஸ்பிரிட்’, கல்கி 2’ மற்றும் ‘பவுஜி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  பவுஜி படத்தை ‘சீதாராமம்’ புகழ் ஹனு ராகவபுடி இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படம் பற்றி  ’1940களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்று புனைவு கதை அல்லது மாற்று வரலாறு.. உலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறந்து போன உண்மைகளுக்கும்.. ஒரே பதில் போர் என நம்பிய ஒரு சமூகத்தின் நிழலில் இருந்து எழுந்த ஒரு போர் வீரனின் கதை.’ எனப் படக்குழு சார்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் பிரபாஸின் ‘பாகுபலி.’ , ‘சலார்’ மற்றும் ‘கல்கி’ வரிசையில் இரண்டு பாகங்களாக ரிலீஸாகவுள்ளதாக படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி அறிவித்துள்ளார். மகாபாரதத்தில் கர்ணன் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்தால் எப்படி போர் நடந்திருக்கும் என்ற கற்பனைதான் இந்த படத்துக்குக் காரணம் எனவும் ஹனு தெரிவித்துள்ளார்.