செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 நவம்பர் 2025 (10:08 IST)

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல்… இயக்குனர் புகார்!

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல்… இயக்குனர் புகார்!
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் ரிலீஸானதும் கவனிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இன்னும் மூன்று தினங்களில் ‘மாஸ்க்’ படம் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்போது அந்த படத்தின் டைட்டிலுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

இதே தலைப்பில் தானொரு படத்தை எடுத்து சென்சாருக்கு அனுப்பும் அளவுக்குத் தயார் செய்துள்ளதாக புதுகை மாரிசா என்பவர் புகாரளித்துள்ளார். இது சம்மந்தமாகத் தலைப்பை கில்டில் பதிவு செய்து வைத்து வருடா வருடம் புதுப்பித்து வந்ததாகவும் , தனக்கு நியாயம் வேண்டுமெனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.