வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2025 (09:29 IST)

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!
சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து உருவாக்கவுள்ள ‘அரசன்’படத்தின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாவதற்கு முதல் நாளே திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, வேல் ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த முன்னோட்டக் காட்சியிலேயே வட சென்னை உலகத்தில் சொல்லப்படாத ஒரு கதை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனும் சில நேர்காணல்களில் வடசென்னை படத்தின் உலகத்தில் நடக்கும் மற்றொரு கதை எனத் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் இந்த படத்தில் இடம்பெறப் போகும் சர்ப்ரைஸ் காட்சிகளுக்காக ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கவின் –ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள வெற்றிமாறன் “அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. அதில் அவரை நடிக்க சொன்னேன். ஆனால் பின்னர் அந்த வேடத்தை மாற்றிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.