இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை
தமிழ் சினிமாவில் இசைத்துறையில் ஒரு மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் தனது இசை பயணத்தை ஆரம்பித்த இளையராஜா இன்றைய genz தலைமுறை வரைக்கும் தன்னுடைய இசையை வழங்கி வருகிறார். ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா எண்ணற்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.
பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இவரைப் பற்றி பல விதங்களில் விமர்சித்தும் வருகின்றனர். கோபக்காரர், திமிர் பிடித்தவர், அகங்காரம் கொண்டவர், யாரையும் மதிக்க மாட்டார் என்று பல பிரபலங்கள் இளையராஜாவை பற்றி பேசி இருக்கின்றனர், இருந்தாலும் அவருக்கு இது இருக்கத்தானே செய்யும், ஏனெனில் அவரை மாதிரி சினிமாவில் சாதனை படைத்தவர் யார் இருக்கிறார்? அதனால் அவருக்கு இருக்கும் கர்வம் சரிதான் என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான பாரதி கண்ணன் தனக்கும் இளையராஜாவுக்கும் நடந்த சண்டை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். முதன் முதலில் இளையராஜாவுடன் கண்ணாத்தா படத்தின் மூலம் கூட்டணி வைத்தார் பாரதி கண்ணன். அந்த படத்தில் இருவருக்கும் இடையே சுமுகமான உறவு தான் போய்க்கொண்டிருந்தது.
அந்த படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். படமும் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி படத்தை தேவாவுடன் இணைந்து பணியாற்றினார் பாரதி கண்ணன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதன்படி தான் தேவாவை இசையமைக்க அழைத்திருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு பிரபு நடிப்பில் வெளியான திருநெல்வேலி படத்தை எடுத்திருக்கிறார் பாரதி கண்ணன்.
அந்த படத்திற்கு இசை இளையராஜா. அந்த படத்திற்கு இளையராஜா 7 பாடல்களை கொடுத்திருக்கிறார். அதில் அமைந்த பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றன. அதில் பிளாஷ்பேக்கில் பிரபுவுக்கு ரோஜாவுக்கும் இடையே ஒரு பாடல் தேவைப்பட்டது. என்ன மாதிரியான பாடல் வேண்டும் என இளையராஜா கேட்டாராம். அதற்கு பாரதி கண்ணன் படையப்பா படத்தில் அமைந்த சுத்தி சுத்தி வந்தீக பாடல் போல வேண்டும் என சொன்னதும் அடுத்த படத்தில் இருந்து வேறொரு இசையமைப்பாளரை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டாராம்.
ஏனெனில் அது ரகுமான் இசையில் அமைந்த பாடல். இளையராஜாவை பொருத்தவரைக்கும் வேறு ஒரு இசை அமைப்பாளர் போட்ட பாடல் மாதிரி வேண்டும் என்று கேட்டால் கோபப்பட்டு விடுவாராம். குறிப்பாக ரகுமான் அவரிடம் கீபோர்டு பிளேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.