தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டனின் மகள்!
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் தமிழில் கமல்ஹாசனோடு இணைந்து ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் கே ஜி எஃப் படம் மூலமாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் இந்திய அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
இதையடுத்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரவீனாவின் மகள் ராஷா தடானியும் ஆசாதி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து ராஷா தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். மகேஷ் பாபுவின் அண்ணன் மகன் ஜெய கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ராஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.