இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் யார்? பி.சி.சி.ஐயின் புதிய முடிவு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ட்ரீம் 11 நிறுவனம் செயல்பட்டு வந்தது. சமீபத்தில், பி.சி.சி.ஐ அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதன் காரணமாக, நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஜெர்சிக்கு ஸ்பான்சர் இல்லாமல் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐ விரைவில் வெளியிடும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஸ்பான்சர்ஷிப், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran