இந்தியா vs பாகிஸ்தான்: போட்டி முடிந்ததும் கைகுலுக்கிக் கொள்ள இரு நாட்டு வீரர்கள்…!
ஆசியக் கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி உப்பு சப்பில்லாமல் ஒரு தலைப் பட்சமாக முடிந்து விட்டது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் பர்கான் மட்டுமே ஓரளவு நிலைத்து ஆடி 42 ரன்கள் எடுத்தார். ஷாகின் அப்ரிடி கடைசி நேர அதிரடியில் இறங்கி 33 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய இந்திய அணி 16 ஆவது ஓவரிலேயே மூன்று விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. அபிஷேக் ஷர்மா 33 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் சேர்த்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் இவ்வளவு ஒருதலை பட்சமாக முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. பஹல்காம் தாக்குதல் சம்மந்தமாக இரு நாட்டுக்கும் இடையே பகை அதிகரித்துள்ளதால் இரு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.